Lok Sabha Elections 2024: முதல் வேட்பாளரை அறிவித்த சீமான்!

நாடாளுமன்றத் தேர்தல் முதல் வேட்பாளரை அறிவித்த சீமான்…

கரூர்: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில் கரூர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

கரூரில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், கடந்த முறை கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட கருப்பையா என்பவரையே மீண்டும் போட்டியிட வாய்ப்பளிப்பேன் என்றார்.

கருப்பையாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்குச் சீமான் வேண்டுகோள் விடுத்தார்.அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளையும் முந்திய நாம் தமிழர் கட்சி, முதல் வேட்பாளரை அறிவித்திருப்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *