தசரா விழாவுக்கு பானு முஸ்டாக்கை அழைத்ததை எதிர்த்து வழக்கு..!

கர்நாடகத்தின் மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் நடைபெறும் தசரா விழாவைத் தொடக்கி வைக்க புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் பானு முஸ்டாக்கை அழைத்துள்ளதை எதிர்த்துத் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

கர்நாடகத்தின் மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் நடைபெறும் தசரா திருவிழாவை மாநில அரசு நடத்துகிறது. இந்த ஆண்டு விழாவைத் தொடக்கி வைக்க புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் பானு முஸ்டாக்கை மாநில அரசு அழைத்துள்ளது.

இதை எதிர்த்துக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோவிலில் நடைபெறும் அக்கிரபூஜையில் இந்து அல்லாதவர் பங்கேற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்நிலையில் தசரா விழாவைத் தொடக்கி வைக்க பானு முஸ்டாக்கை அழைப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி அமர்வு இதை விசாரணைக்கு ஏற்க ஒப்புக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *