
Cinema Updates:
நடிகர் சிம்பு செப்டம்பர் 19-ம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும், அளிக்கவில்லை எனில், அவர் மற்ற படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக 2021-ம் ஆண்டு “கொரோனா குமார்” என்ற படத்தில் நடிக்க நடிகர் சிம்பு ரூ. 9.5 கோடி சம்பளமாகப் பெற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டு இருக்கிறார்.இதைத் தொடர்ந்து ரூ. 4.5 கோடி வரையிலான தொகையைப் பெற்றுக் கொண்ட நடிகர் சிம்பு, படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று வேல்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டு இருக்கிறது.


