Today Gold Rate:ரூ.55 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன..?

Advertisements

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.55 ஆயிரத்தை கடந்துள்ளது.

சென்னை:தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இந்த நிலையில் 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் விலையும் மளமளவெனச் சரிந்தது. விலை குறைந்து கொண்டே வந்து, ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. மீண்டும் பழையபடி தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது. உயரும்போது அதிக அளவில் உயர்வதும், சரியும்போது சொற்பமாகச் சரிவதும் என இருந்து வருகிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,600-க்கு விற்பனையானது. தொடர்ந்து சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.55,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *