Lok Sabha Election 2024: ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் வாக்கு மாயம்!

Advertisements

கடலூரில் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் வாக்கினை வேறொருவர் பதிவு செய்ததாக வாக்குச்சாவடி மையத்திலேயே அவர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள கோண்டூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாந்தி என்பவர் இன்று தனது வாக்கினை பதிவு செய்ய வந்த பொழுதுத் தேர்தல் அலுவலர்கள் அவரது வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தனது வாக்கினை பதிவு செய்தது யார் எனவும்? தேர்தல் அலுவலர்கள் அலட்சியத்துடன் நடந்து கொண்டதால் தனது வாக்குரிமை பறிபோனதாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து அரசு அதிகாரிகள் உடனடியாக அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தன்னை போன்று மற்றவர்களுக்கு இந்த நிலை ஏற்படக் கூடாது எனவும் அவர் மிகவும் மன வருத்தத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார்.அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தனது வாக்கினை பதிவு செய்தது யார் எனவும்? தேர்தல் அலுவலர்கள் அலட்சியத்துடன் நடந்து கொண்டதால் தனது வாக்குரிமை பறிபோனதாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *