Lok Sabha Election 2024: ஓபிஎஸ், மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு!

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் வேலூர் தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலூர்: தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியென மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் எனப் பலர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. ஆதரவுடன் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். அதேவேளை, ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர் செல்வம் என்ற பெயரில் மொத்தம் 5 பேர் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளனர்.

இதனிடையே, சுயேட்சை வேட்பாளர்களுக்கு இன்று சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் பலாப்பழம் சின்னம் ஒதுகப்பட்டுள்ளது.

இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், வேலூர் தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *