காங்கிரஸ் ஆட்சியில்லாததால் வலிமையான இந்தியா வலிமை இழந்துவிட்டது : தங்கபாலு.!

காங்கிரஸ் ஆட்சியில் இல்லாததால் வலிமையான பாரதம் வலு இழந்து போய்விட்டதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி, அவரது உருவச் சிலைக்குக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர்கள் கராத்தே செல்வம், விஜய் சேகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, செய்தியாளரிடம் பேசிய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு, காங்கிரஸ் வரலாற்றில் பெரியாருக்கு என்று ஒரு தனி இடம் இருக்கிறது என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் காலத்தில் மட்டும்தான் வலிமையான பாரதம் இருந்தது என்றும், காங்கிரஸ் இல்லாத போது வலிமையான பாரதம் வலு இழந்து போய்விட்டது என்பதை மறுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி பேசிய போது, காங்கிரசிற்கும் தந்தைப் பெரியாருக்கும் ஆழமான பிணைப்பு இருக்கிறது எனத் தெரிவித்தார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 69சதவீதம் இட ஒதுக்கீடு இருப்பதாகக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *