Tharapuram : அதிமுக திமுகவின் கிளையாக மாறிவிட்டது : பிரச்சாரத்தில் விஜய் காட்டம்..!

தாராபுரத்தில் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரச்சாரயம் செய்தபோது, தி.மு.க.வின் கிளையாக, அதிமுக மாறிவிட்டது என்று முதலமைச்சர் ஜோசப்விஜய் குற்றம் சாட்டினார். தாராபுரத்தில் வரும் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் ஜோசப்விஜய் இன்று பிரசாரம் செய்தார்.

அப்போது, இன்னும் நாங்கள் தான் முதலமைச்சர், நாம் தான் அதிகாரத்தில் இருக்கிறோம் என சிலர் நினைக்கின்றனர் என்றும், தீய சக்தி தி.மு.க.வுடன் அ.தி.மு.க. மறைமுக கூட்டணி வைத்துள்ளது என்றும், தீய சக்தி தி.மு.க.வின் பினாமிபோல், சுய நலமாக சுற்றுபவர்கள் நாம் கிடையாது என்றும், மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவோம். மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்துள்ளோம் என்றும் முதலமைச்சர் ஜோசப்விஜய் தெரிவித்தார்.

மேலும், கொளத்தூர் மக்களுக்கு கையெடுத்து கும்பிட்டு கோடான கோடி நன்றி எனக் கூறுகிறார் மு.க.ஸ்டாலின். தி.மு.க. ஆட்சியில் நிறைய தவறுகள் நடந்திருக்கிறது, அதனால் தான் கொளத்தூரில் மக்கள் ஓட்டு போடவில்லை என்றும், இனி ஒவ்வொரு தேர்தலிலும் ஸ்டாலின் கோடான கோடி நன்றி எனக் கூறிக் கொண்டேதான் இருக்க வேண்டும் என்றும், மு.க.ஸ்டாலின் அவன், இவன் என ஒருமையில் பேசுகிறார்,

நான் பாசமாக பேசுகிறேன் எனவும், ஆபாச நதி, வன்ம நதியை வளர்த்து வைத்திருக்கிறார் ஸ்டாலின் எனவும், நீங்கள் பேசப் பேச நாங்கள் உயர்வோம். தரம் தாழ்த்தி பேசப் பேச தவெக உயர்ந்து கொண்டே இருக்கும் என்றும் தெரிவித்த அவர், தி.மு.க, அ.தி.மு.க.வின் பொய்களை நம்பாதீர்கள், எம்.ஜி.ஆர்-க்கும் ஜெயலலிதாவிற்கும் துரோகம் செய்த அ.தி.மு.க.விற்கு ஓட்டு போடுவீர்களா என கேள்வி எழுப்பினார்.

மேலும், கொங்கு மக்கள் எப்போதுமே உழைக்கும் மக்கள். எனவே தாராபுரம் மக்கள் அனைவரும் உங்கள் வெற்றி வேட்பாளர் சத்தியபாமாவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஜோசப்விஜய் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *