Suresh Gopi:மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகும் முதல் பா.ஜ.க. எம்.பி?

ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. இதில் மத்திய அமைச்சராக நடிகரும், திருச்சூர் தொகுதி பா.ஜ.க. எம்.பியுமான சுரேஷ் கோபியும் பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், கேரளா மாநிலத்தின் திருச்சூர் தொகுதி பா.ஜ.க. எம்.பி. சுரேஷ் கோபி மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

திரைப்படங்களில் நடிக்க இடையூறாக இருக்கும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமைச்சர் பதவி வேண்டாமென ஏற்கனவே பாஜக தலைமையிடம் கூறினேன். எனினும் பதவி வழங்கப்பட்டுவிட்டது.

இதனால் அமைச்சர் பதவியிலிருந்து விலக விரும்புவதை பா.ஜ.கத்தலைமையிடம் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலத்திலிருந்து தேர்வாகி இருக்கும் முதல் பா.ஜ.க. எம்.பி. என்ற பெருமையைச் சுரேஷ் கோபி பெற்றிருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *