Advertisements

டெல்லியில் இரண்டு ஆண்களைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூன்று பேரைப் போலீசார் கைது செய்தனர்.
டெல்லியின் ஷகர்பூர் பகுதியில் LGBTQ சமூகத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் ஓரின சேர்க்கையாளர்களாக இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் ராம் லீலா படத்தைப் பார்த்து விட்டு வீட்டிற்கு சென்றிருக்கும்போது 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட இரு ஆண்களும் புகார் அளித்த நிலையில் விசாரணையைத் தீவிரப்படுத்தியது டெல்லி போலீஸ். 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்ட அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு ஆண்களையும் 5 பேர் கொண்ட கும்பல் வன்முறைக்கு ஆளாக்கியது தெரிய வந்தது.
இதையடுத்து புகாரின் அடிப்படையில், தேவஷிஷ் வர்மா, சுர்ஜித், ஆர்யன் உள்ளிட்ட இளைஞர்களைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவான இரு இருவரை போலீசார் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட இருவரும் திரைப்படம் பார்க்கச் சென்றபோது, குற்றவாளிகளில் ஒருவர் அதே படத்திற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அந்த நபர், பாதிக்கப்பட்ட இருவரும் ஓரின சேர்க்கையாளர்கள் எனத் தெரிந்து கொண்டு, தனது நண்பர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அங்கு வரவைத்ததாகவும், பின்னர், இருவர் மீதும் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வந்த நிலையில் தற்போது, ஆண்களுக்கும் இந்தக் கொடூரம் அரங்கேறி இருப்பது டெல்லியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Advertisements


