கல்விப் புரட்சியின் முன்னோடிகள் கிறிஸ்தவர்கள்..!

Advertisements
கிறிஸ்தவ அமைப்புகள் இல்லை என்றால் கல்வியில் நாம் வளர்ச்சி அடைந்திருக்க மாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை பரங்கிமலையில் உள்ள தனியார் பள்ளியின் 125 ஆவது ஆண்டு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். அப்போது, அவருக்கு பள்ளியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அமைச்சர் அன்பில் மகேஷ் 125 ஆவது ஆண்டு புத்தகத்தினை வெளியிட்டார்.
இதையடுத்து, விழாவில் பேசிய அவர், 125 ஆண்டுகள் ஒரு பள்ளி செயல்படுவது சாதாரணமான விஷயம் அல்ல, இதை செய்து காட்டக்கூடியக் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு  நன்றியைத் தெரிவித்தார். தொடர்ந்து, கிறிஸ்தவர்கள் இல்லை எனக் கூறினால், கல்வி வளர்ச்சி அடைந்திருக்க முடியாது என்றும், அன்றைய காலகட்டத்தில் வேதக் கல்வி மட்டும் தான் இருந்தது என்றும் கூறினார். மேலும், இந்தக் கிறிஸ்தவர்களின் மூலமாகத்தான் இன்று இருக்கும் கல்வி முறை வளர்ந்துள்ளது எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *