
லியோ டிரெய்லர் வெளியீடு – ரசிகர்கள் கொண்டாட்டம்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடலான `BADASS’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி அதிவேகமாக வைரல் ஆனது.
இந்நிலையில் லியோ படத்தின் டிரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியானது. தமிழகம் முழுவதும் திரையரங்கில் லியோ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.இதனை ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
Get ready to experience the fiercely intense #LeoTrailer at 6:30 PM 🔥#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @7screenstudio @Jagadishbliss @SonyMusicSouth @SunTV #Leo pic.twitter.com/0bW3KP1TEx
— Seven Screen Studio (@7screenstudio) October 5, 2023
Thalapathy Fans 🔥#LEO Trailer in 16 Minutespic.twitter.com/WPDh19XlOI
— ForumKeralam (@Forumkeralam2) October 5, 2023




