
அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர்!
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து நம்மையும் கடித்துவிட்டார். தன்னை தானே விளம்பரப்படுத்தும் ஒரு முதிர்ச்சியற்ற ஒரு பக்குவம் இல்லாத அரசியல்வாதி தான் அண்ணாமலையென அதிமுக மூத்த நிர்வாகி நத்தம் விஸ்வதநாதன் விமர்சித்துள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வதநாதன் கூறுகையில், தன்னை தானே விளம்பரப்படுத்தும் ஒரு முதிர்ச்சியற்ற ஒரு பக்குவம் இல்லாத அரசியல்வாதி தான் அண்ணாமலை செயல்படுகிறார். அதிமுகவின் வெற்றிக்குப் பாஜக தடையாக இருந்தது. அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலக்கப்பட்டதால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். பாஜக அதிமுகவோடு இருந்ததால் காலில் ஒரு கட்டையைக் கட்டிக் கொண்டு ரேசில் ஓடியது போன்று இருந்தது. அதிமுக வெற்றிக்கு இடையூறாக இருந்த பாஜக என்ற தடை நீக்கப்பட்டது. பாஜகவின் கொள்கைகள்மீது அதிமுகவுக்கு எப்போதும் உடன்பாடு இல்லை அதிமுகவின் தயவு இல்லாமல் பாஜகவால் வெல்ல முடியாது. தமிழகத்தில் பாஜக எந்த இடத்திலும் டெபாசிட் வாங்காது.
கூட்டணியிலிருந்து கொண்டு ஜெயலலிதாவை விமர்சனம் செய்து கூட்டணி தர்மத்தை அண்ணாமலை மீறிவிட்டார். கண்டன தீர்மானம் நிறைவேற்றியும் அண்ணாமலை திருந்தாமல் அண்ணாவை விமர்சனம் செய்திருக்கிறார். அண்ணாமலைக்கு இது போன்ற தைரியம் கொடுத்தது யார். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அண்ணாமலை. ரவுடிகள், கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள், கந்துவட்டிக்காரர்கள் தான் பாஜகவில் அதிகளவில் உள்ளனர் என நத்தம் விஸ்வநாதன் ஆவேசமாக விமர்சித்துப் பேசினார்.


