Nobel Peace Prize: ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகமதி க்கு அமைதிக்கான நோபல் பரிசு!

Advertisements

ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

திங்கட்கிழமை முதல் 2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றைத் தொடர்ந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு நேற்று  அறிவிக்கப்பட்டது. நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரான ஜான் ஃபோஸ்-க்கு இந்தாண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

குரலற்றவர்களின் குரலாக உள்ள அவரது புதுமையான நாடகங்கள் மற்றும் உரைநடைக்காக இந்த நோபல் பரிசு அவருக்குக் கொடுக்கப்படுகிறது என ஸ்வீடிஸ் அகாடமி கூறியுள்ளது. இந்த நிலையில் இன்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு  உள்ளது.

பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடியதற்காக  ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகமதிக்கு 2023 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுள்ளது.  அக்டோபர் 9ஆம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படஉள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *