Nobel Prize in literature: ஜான் ஃபோஸ்-க்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!

ஜான் ஃபோஸ்-க்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!

திங்கட்கிழமை முதல் 2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றைத் தொடர்ந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரான ஜான் ஃபோஸ்-க்கு இந்தாண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

குரலற்றவர்களின் குரலாக உள்ள அவரது புதுமையான நாடகங்கள் மற்றும் உரைநடைக்காக இந்த நோபல் பரிசு அவருக்குக் கொடுக்கப்படுகிறது என ஸ்வீடிஸ் அகாடமி கூறியுள்ளது. நாளைப் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. பின்னர், அக்டோபர் 9ஆம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *