வங்கக் கடலில் உருவான அக்வான் புயல் வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிசா பகுதிகளில் கரையைக் கடந்தது.
வங்கக் கடலில் உருவான அக்வான் புயல் வடக்காக நகர்ந்து வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிசா பகுதிகளில் இன்று காலை ஏழரை மணி முதல் எட்டுமணிக்குள் கரையைத் தொட்டது. அதன்பின் இரண்டு மணி நேரத்தில் முழுவதும் கரையைக் கடந்தது.
புயல் கரையைக் கடந்தபோது மணிக்குத் தொண்ணூறு கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ஒடிசா தலைநகரம் புவனேசுவரத்தில் கனமழை பெய்தது.
ஒடிசாவின் பூரியில் கடல் அலைகள் வழக்கத்துடன் சீற்றமாகக் காணப்பட்டன. கரையைக் கடந்த புயல் வடக்கு வடகிழக்காக நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




