தனியார் பள்ளிகளை விடச் சிறந்த மாணவர்களை அரசுப் பள்ளிகளில் உருவாக்குவோம் என்று அமைச்சர் ராஜமோகன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற கம்பன் விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜமோகன், கனிம வளத்துறை அமைச்சர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர்கள் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர். இதில் கம்பன் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய அமைச்சர் ராஜமோகன், தனியார் பள்ளிகளை விடத் தலைசிறந்த மாணாக்கர்களை அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்போவதாக உறுதியளித்தார்.
தனது கைக்கடிகாரம் பற்றிப் பேசிய அவர் அதன் விலை 5,500 ரூபாய் தான் எனத் தெரிவித்தார்.

