கனடாவை சேர்த்தால் ஐரோப்பா மீது கடும் வரி : டிரம்ப் அதிரடி எச்சரிக்கை.!

கனடாவை உறுப்பினராகச் சேர்த்து கொண்டால், ஐரோப்பிய நாடுகள் மீது நாங்கள் பெரிய அளவில் வரிகளை விதிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் கனடா இணைவது என்பது சிரிக்கத்தக்கது என்று விமர்சித்தார்.
ஐரோப்பிய தலைவர்கள் கனடாவை உறுப்பினராகச் சேர்த்து கொள்வது நல்ல நோக்கத்தில் இருந்தால் நலம் என்று குறிப்பிட்டார். ஆனால் அப்படி இல்லாமல் கெட்ட உள்நோக்கத்துடன் இருக்கும் என்றால், ஐரோப்பிய நாடுகள் மீது நாங்கள் பெரிய அளவில் வரிகளை விதிப்போம் என்று எச்சரித்தார்.
மேலும், ஐரோப்பாவின் சில பகுதிகளில் வர்த்தகங்களை நிறுத்தி கொள்வோம் என்றும்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *