108 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எப்போது? அன்புமணி கேள்வி!

தமிழ்நாட்டில் உயிர்காக்கும் 108 அவசர ஊர்தி சேவையை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் வாயிலாக அரசே ஏற்று நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்., தமிழ்நாட்டில்  அவசர மருத்துவ சேவை வழங்குவதற்கான 108 அவசர ஊர்திச் சேவைத் திட்டத்தில் பணியாற்றி வரும் 7500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு  குறித்த காலத்தில் ஊதியம், ஊதிய உயர்வு ஆகியவையும், பணிப்பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கால நேரம் பார்க்காமல் மக்களின்  உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 108 அவசர சேவை பணியாளர்களுக்கு வாழ்வாதார உத்தரவாதம் கூட வழங்கப்படாதது கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகம், ஹரியானா, சிக்கிம்  ஆகிய மாநிலங்களில்  108 அவசர ஊர்தி சேவையை  மாநில அரசின் சுகாதார சேவைகள் துறைகளே  கவனித்துக் கொள்வதாகவும், இந்த முறையை தமிழ்நாட்டில் கடைபிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று சுட்டிகாட்டியுள்ளார். எனவே, தமிழ்நாட்டில் உயிர்காக்கும் 108 அவசர ஊர்தி சேவையை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் வாயிலாக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *