பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளைச் சூறையாடியது கல்மேகி புயல்..!

Advertisements

பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாடுகளைச் சூறையாடிய கல்மேகி புயலால் 190 பேர் உயிரிழந்த நிலையில், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளும் புயலின் தாக்குதலுக்கு இலக்குகளாகி உள்ளன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய கல்மேகி புயலுடன் கனமழையும் பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தன.

இந்தப் புயல் மழை வெள்ளப் பேரழிவில் பிலிப்பைன்சில் 188 பேரும், வியட்நாமில் 5 பேரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் வெள்ளப் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் வீடிழந்துள்ளனர்.

இவர்கள் பள்ளிகளிலும் பொதுக் கட்டடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்சில் சாய்ந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றுவது, சிதைந்த மின் கட்டமைப்புகளைச் சீரமைப்பது ஆகிய நடவடிக்கைகளில் அரசு அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாடுகளைச் சூறையாடிய புயல் அடுத்துக் கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளையும் தாக்கியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *