Khelo India Youth Games: தங்கம் வென்று அசத்திய ஆண்கள், பெண்கள் அணி!

Advertisements

தமிழ்நாடு அணி புள்ளிப்பட்டியலில் 18 தங்கத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாடு அணி மொத்தம் 51 பதக்கங்கள் வென்றுள்ளது. இன்று நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு ஆண்கள் அணியும் தமிழ்நாடு பெண்கள் அணியும் தங்கம் வென்று அசத்தியுள்ளன. ஆண்கள் அணி தனது போட்டியில் 86 – 85 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்று அசத்தியது.

கேலோ இந்தியா 2024 இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றது.

தமிழ்நாட்டில் நடந்து வரும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு அணி தங்கங்களை வென்று அசத்தி வருகின்றது.

இன்று நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு ஆண்கள் அணியும்  தமிழ்நாடு பெண்கள் அணியும் தங்கம் வென்று அசத்தியுள்ளன. ஆண்கள் அணி தனது போட்டியில் 86 – 85 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்று அசத்தியது.

அதேபோல் மகளிர் பிரிவில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு மகளிர் அணி 70 – 66 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழ்நாடு அணி புள்ளிப்பட்டியலில் 18 தங்கத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு அணி மொத்தம் 51 பதக்கங்கள் வென்றுள்ளது.

மகாராஸ்ட்ரா அணி 74 பதக்கங்களுடன் முதல் இடத்திலும் ஹரியானா 59 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *