CBE National Aero Skato Ball: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!

Advertisements

கோவை: தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் -தங்கப் பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பாக விளையாடிய கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 36 பேர் தங்கபதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழகத்தில் முதன் முதலாக 9வது தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டி அண்மையில் திருச்சியில் நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு ராஜஸ்தான் மகாராஷ்டிரா, கேரளா,பாண்டிச்சேரி தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கலந்து கொண்டன.

ஆண்கள்,பெண்கள் என மொத்தம் ஆறு பிரிவுகளில் நடைபெற்ற ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாடிய கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 34பேர் தங்க பதக்கங்களும், 2 பேர் வெண்கல பதக்கங்கள் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தில் தமிழக ஸ்கேட்டிங் அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,ஆகியோர் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்ததுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.மேலும் இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஆசிய அளவிலான போட்டியில் தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *