VCK Sudar Ottam: மாநாட்டு சுடர் பயணம் துவக்கம்!

Advertisements

திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் வெல்லும் சனநாயக மாநாட்டின் சகோதரத்துவ சுடர் பயணத்தை கீழ்வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் இருந்து நாகை சட்ட மன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் தொடங்கி வைத்தார்…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் வெல்லும் சனநாயக மாநாடு நாளை திருச்சியில் நடைப்பெற உள்ளது. கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைப்பெறும் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டை முன்னிட்டு சென்னை அம்பேத்கர் திடலில் இருந்து சமத்துவ சுடர் பயணமும், மேலவளவு தியாகிகள் நினைவிடத்தில் இருந்து சுதந்திர சுடர் பயணமும், கீழ்வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் இருந்து சகோதரத்துவ சுடர் பயணமும் திருச்சி மாநாட்டு திடலுக்கு செல்கிறது.

நாகை வடக்கு மாவட்டம் சார்பில் கீழ்வேளூர் அருகே உள்ள கீழ்வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் இருந்து புறப்பட்ட சகோதரத்துவ சுடர் பயணம் மாநில துணை பொதுச்செயலாளர் ரஜினிக்காந்த் தலைமையிலும் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நாக.அருட்செல்வன் வரவேற்பளித்தார்.இந்த சகோதரத்துவ சுடர் பயணத்தை நாகை சட்டமன்ற உறுப்பினரும் மாநில துணை பொதுச்செயலாளருமான ஆளூர் ஷாநவாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன், சிபிஎம் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, காங்கிரஸ் மாவட்ட தலைவர் அமிர்தராஜா, விசிக மேலிட பொறுப்பாளர் என்.டி.இடிமுரசு, நாகை தெற்கு மாவட்ட செயலாளர் செல்வராசு, திருவாரூர் மாவட்ட செயலாளர்கள் வெற்றி, தங்க.தமிழ்செல்வன், தமிழோவியா, மண்டல துணை செயலாளர்கள் மன்னை ரமணி, நாகை சாதிக், மாவட்ட துணை செயலாளர் அரா.பேரறிவாளன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கதிர்நிலவன், வடிவழகன், கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், ராஜேஷ், பாவேந்தன் ,நகர செயலாளர் வி.பி.குணா உள்ளிட்ட மாநில,மாவட்ட, ஒன்றிய, நகர ,கிளை நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *