Rahul Gandhi:செப்.,8ல் அமெரிக்கா செல்கிறார் ராகுல்: எதற்காக தெரியுமா?

வாஷிங்டன்: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், செப்.,8 முதல் 10 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா கூறியுள்ளார்.

சர்வதேச கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்கும் புதுச்சேரி வீரருக்கு எதிர்க்கட்சித்தலைவர் பாராட்டு
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான பிறகு ராகுலை சந்திக்க வேண்டும் என இந்திய வம்சாவளியினர், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், தலைவர்கள் மற்றும் சர்வதேச மீடியாக்கள் கோரிக்கை விடுத்தனர். அவருடன் கலந்துரையாடவும் விருப்பம் தெரிவித்தனர்.

பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க ராகுல் அமெரிக்கா வருகிறார். 8 ம் தேதி டல்லாசிற்கும், 9 மற்றும் 10 ம் தேதி வாஷிங்டன்னிற்கும் வருகிறார். டல்லாஸ் நகரில், டெக்சாஸ் பல்கலை மாணவர்கள், கல்வியாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிறகு விருந்திலும் கலந்து கொள்கிறார். வாஷிங்டன்னிலும் இதேபோன்று நிகழ்ச்சிகளிலும் ராகுல் கலந்து கொள்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *