கமல்ஹாசனின் 234-வது படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.இப்படத்தின் அறிமுக வீடியோ இன்று வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசனின் 234-வது படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. இதையடுத்து இப்படத்தின் முன்னோட்ட காட்சி இன்று (நவம்பர் 6) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. முகத்தை முழுவதுமாக மூடிய நிலையில் கமல்ஹாசனின் கண்கள் மட்டும் தெரியும் இந்த போஸ்டரில் டைட்டில் இன்று வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Embrace the EPIC REVEAL! Title announcement video at 5pm today! Stay tuned for an unforgettable experience! #TitleAnnouncementToday5pm #KH234 #Ulaganayagan #KamalHaasan #HBDKamalSir #HBDUlaganayagan@ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @MShenbagamoort3… pic.twitter.com/S1xfNum9bx
— Raaj Kamal Films International (@RKFI) November 6, 2023