FIDE Grand Swiss 2023: சகோதரனைத் தொடர்ந்து  சகோதரி வெற்றிவாகை!

உலக செஸ் போட்டியில் அசத்தி வரும் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி FIDE கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெண்றுள்ளார்.

பிரிட்டனில் நடைபெற்ற FIDE கிராண்ட் ஸ்விஸ் மகளிர் பிரிவில் நடைபெற்ற இறுதி சுற்று நடைபெற்றது.  மங்கோலிய வீராங்கனை பத்குயாக் முங்குதுலை எதிர்த்து வைஷாலி எதிர்கொண்டார். இத்தொடரில் அதிக புள்ளிகள் பெற்றவர் என்ற முறையில் சாம்பியன் பட்டத்தை வைஷாலி வென்றார். FIDE Grand Swiss 2023

பரிசுத்தொகையாக  20 லட்சம்  அவர் வென்றார். மேலும் அடுத்தாண்டு கனடாவில் நடைபெற உள்ள மகளிருக்கான செஸ் CANDIDATE தொடரில் விளையாடவும் வைஷாலி தேர்வாகி உள்ளார்.

ஏற்கெனவே ஆண்கள் பிரிவில் உலக கோப்பையில் வெள்ளி பதக்கம் வென்றது மூலம் அவரது சகோதரர் பிரக்ஞானந்தா CANDIDATE தொடருக்கு தேர்வாகிய நிலையில் தற்போது அக்கா வைஷாலி மகளிர் பிரிவில் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்து கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் வைஷாலி நெருங்கி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *