Advertisements

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்துள்ளார். எந்தெந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு, என்னென்ன புதிய திட்டங்களை அறிவித்துள்ளார் என்று பார்க்கலாம்..
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன் 2026 – 2027 நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசினார். அப்போது, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தாய்மாமனின் அன்பளிப்பாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்துக்காக 560 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித் துறைக்கு 44 ஆயிரத்து 527 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார். அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கும் திட்டத்துக்கு 300 கோடி ரூபாயும், பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 125 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க 277 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறைக்கு எட்டாயிரத்து 393 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க இரண்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்படும்.
தொழிலாளர் நலத்துறைக்கு 2022 கோடி ரூபாயும், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைக்கு 17 ஆயிரத்து 150 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத்துறைக்கு 2022 கோடி ரூபாயும், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைக்கு 17 ஆயிரத்து 150 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இளைஞர் நலன் விளையாட்டுத் துறைக்கு 1051 கோடி ரூபாயும், சமூக நீதித் துறைக்கு மூவாயிரத்து 937 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு 1485 கோடி ரூபாயும், சமூகநலத்துறைக்கு ஒன்பதாயிரத்து 818 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டத்துக்கு 710 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு 1485 கோடி ரூபாயும், சமூகநலத்துறைக்கு ஒன்பதாயிரத்து 818 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டத்துக்கு 710 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண்களின் திருமண நன்னாளில் அண்ணனின் சீராக 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப்புடவை வழங்க 812 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறைக்கு 23 ஆயிரத்து 357 கோடி ரூபாயும், கூட்டுறவுத் துறைக்கு 8028 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கால்நடைப் பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறைக்கு 4880 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கால்நடைப் பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறைக்கு 4880 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆடுகள் வளர்ப்புத் திட்டத்துக்கு 110 கோடி ரூபாயும், கறவை மாடுகள் வழங்கும் திட்டத்துக்கு 57 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்குப் பணியில்லாக் கால உதவித்தொகை ஆறாயிரம் ரூபாயில் இருந்து ஏழாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக 135 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொழில்துறைக்கு 4414 கோடி ரூபாயும், குறு சிறு நடுத்தரத் தொழில்துறைக்கு 2142 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மின்துறைக்கு 15 ஆயிரத்து 828 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1543 கோடி ரூபாய் முதலீட்டில் 178 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும், இரண்டாயிரம் கோடி ரூபாயில் 40 ஆயிரம் பழைய மின்மாற்றிகள் மாற்றப்படும்.
மின்துறைக்கு 15 ஆயிரத்து 828 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1543 கோடி ரூபாய் முதலீட்டில் 178 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும், இரண்டாயிரம் கோடி ரூபாயில் 40 ஆயிரம் பழைய மின்மாற்றிகள் மாற்றப்படும்.
வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு 8852 கோடி ரூபாயும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 29 ஆயிரத்து 863 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறைக்கு 21 ஆயிரத்து 524 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்புத் திட்டத்துக்கு 9300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறைக்கு 13 ஆயிரத்து 561 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு ஆயிரம் புதிய ஏசி மின்சாரப் பேருந்துகள் வாங்கவும், பணிமனைகளில் மின்சார சார்ஜிங் உட்கட்டமைப்புகளை நிறுவவும் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நீர்வளத்துறைக்கு 9264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நீர்வளத்துறைக்கு 9264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
காவிரி – வைகை – குண்டாறு ஆறுகள் இணைப்புத் திட்டத்துக்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு 1762 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு வீடு கட்டுவதற்கான தொகை 3 இலட்சத்துப் பத்தாயிரம் ரூபாயில் இருந்து 5 இலட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல் ஆண்டில் 3500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 70 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். ஊரகவளர்ச்சி ஊராட்சித் துறைக்கு 39 ஆயிரத்து 609 கோடி ரூபாயும், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 14 ஆயிரத்து 830 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.உள்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறைக்கு 17 ஆயிரத்து 290 கோடி ரூபாயும், வருவாய்த் துறைக்கு 11 ஆயிரத்து 532 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்குப் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு 838 கோடி ரூபாயும், ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்குப் பிந்தைய பணப் பயன்களுக்கு 47 ஆயிரத்து 240 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா கலைப் பண்பாட்டுத் துறைக்கு 775 கோடி ரூபாயும், இந்து அறநிலையத் துறைக்கு 708 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Advertisements





