Kerala Devastating Rain : இடுக்கி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை.!

Advertisements

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதற்கட்டமாக நொடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் கேரள மாநிலத்திலும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவருகிறது. தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்திலும் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.

இதனால் 155 அடி உயரமுள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அணியை எட்டியுள்ளது. இதையடுத்து அணையின் 4 மதகுகள் வழியாக நொடிக்கு ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் பெரியாற்றின் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது மழை தீவிரமடைந்தால் அணையிலிருந்து திறந்துவிடபடும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும் என்றும் தமிழகப் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *