Advertisements

பெரும்பாக்கம் அரசு பள்ளி மாணவிகள் தட்பவெப்பநிலை குறித்து ஆராய்வதற்காக 80 கிராம் எடையில் தாயரித்த சிறிய ரக செயற்கைகோள்…
செயற்கைகோளை பலூன் மூலம் வானில் பறக்கவிட்டு மாணவிகள் அசத்தல். சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை மற்றும் வாயுசாஸ்த்ரா ஏரோபேஸ் நிறுவனம் இணைந்து பெரும்பாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறிய ரக ராக்கெட் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.
அதன்படி 50க்கும் மேற்பட்ட மாணவிகள் சுமார் 40 நேரத்தில் 2 சிறிய ரக ராக்கெட்களை தாயரித்து அசத்தி உள்ளனர். சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்தை கண்காணிக்க தயாரிக்கப்பட்ட இந்த சிறிய ரக ராக்கெட்டுக்கு விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம் பெயர் சூட்டப்பட்டது.80 கிராம் எடை கொண்ட இந்த சிறிய ராக்கெட்டை பெரும்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் பலூன் மற்றும் பாராசூட் மூலம் வானில் பறக்கவிட்டு தட்பவெப்பநிலை, காலநிலையை கணினி மூலம் மாணவர்கள் கண்கானித்தனர்.
வெற்றி கரமாக வானில் செலுத்தப்பட்ட சிறிய ராக்கெட்டை தயாரித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். பெரும்பாக்கம் போன்ற குடிசைமாற்று வாரியத்தில் உள்ள ஏழ்மையான குழந்தைகளும் விண்வெளி குறித்து ஆராய்ச்சியாளர்களாக உருவாக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தாக பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை நிறுவனர் திய்வா தெரிவித்தார்.
Advertisements


