
இராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள கடையில் தீபாவளியையொட்டி 24 காரட் தங்கத்தில் செய்த இனிப்புப் பண்டத்தைச் செய்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தீபாவளியையொட்டி இனிப்புப் பண்டங்களின் விலையும் களைகட்டியுள்ளது. இராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள இனிப்புக் கடையில் 24 காரட் தங்கத்தைப் பஸ்பமாக்கி அதில் இருந்து பல்வேறு பண்டங்களைச் செய்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.
சுவர்ணப் பிரசாதம் என்கிற பண்டத்தின் விலை ஒரு கிலோ இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் ஆகும்.பிஸ்தா லோஞ்ச் ஒரு கிலோ ஏழாயிரம் ரூபாய்க்கும், கஜு கட்லி 3500 ரூபாய்க்கும், தங்க லட்டு 2500 ரூபாய்க்கும், ரசமலாய் ஒரு துண்டு 400 ரூபாய்க்கும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தங்கப் பஸ்பத்தால் செய்யப்பட்டுள்ள சுவர்ணப் பிரசாதம் என்ற பண்டத்தைச் செய்து விற்கும் கடையின் உரிமையாளர் அஞ்சலி ஜெயின் இது குறித்துச் செய்தியாளரிடம் பேசினார்.
அப்போது இந்த இனிப்பு வகை இந்தியாவிலேயே விலை உயர்ந்தது என்றும், இதை ஒரு நகைப்பெட்டியில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தங்கத்தை ஆயுர்வேத முறையில் எரித்துச் சாம்பலாக்கி அதை இந்தப் பண்டத்தில் கலந்திருப்பதாகவும், அதன் மேற்புறத்தில் குங்குமப்பூவால் அலங்கரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
. இந்தியப் பாரம்பரியம் விலை மதிப்பற்றது என்பதை இது காட்டுவதாகவும் அஞ்சலி ஜெயின் குறிப்பிட்டார்



