கேரளாவிலும் ஆளுநர் சட்டசபையில் அடாவடி!

Advertisements

கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அல்லேகர், சட்டசபையில் நிலுவையில் உள்ள மசோதக்கள் குறித்த குறிப்புகளை வேண்டுமென்றே வாசிக்கவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

கேரள மாநிலத்தின் இந்த வருடத்திற்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அல்லேகர் சட்டசபையில் ஆளுநர் உரையை வாசித்தார். அப்போது சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்துவிட்டார். இதை கவனித்த முதலமைச்சர் பினராயி விஜயன், கவர்னர் சில பகுதிகளை தவிர்த்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பேசியபோது, பாஜக தலைமையிலான மத்திய அரசின் கொள்கையை விமர்சிக்கும் பகுதிகள் மற்றும் கவர்னர் மாளிகையில் நிலுவையில் உள்ள மசோதக்கள் குறித்த குறிப்புகளை அவர் வேண்டுமென்றே தவிர்த்துள்ளார் என்றார்.

மத்திய அரசு நிதி வழங்காதது மற்றும் மாநில அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காதது போன்றவற்றை தவிர்த்துள்ளதாகத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *