
அமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்தால் ஐரோப்பிய பொருட்கள் மீதும் இன்னும் கடுமையான வரிகளை விதிக்கும் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கிரீன்லாந்து விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அமெரிக்காவிற்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் வர்த்தகப் போரை துவங்குவது மிகவும் விவேகமற்றது என்றும் கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது என்பது நில விரிவாக்கம் இல்லை என்றார்.
மேலும், இது சீனாவின் ஆதிக்கத்தை கட்டுபடுத்தப்படும் ஒரு முக்கியமான நடவடிக்கை என்று குறிப்பிட்டார். கிரீன்லாந்தை கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதித்தார்.
இந்நிலையில் , இதற்கு எதிராக அமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்தால் ஐரோப்பிய பொருட்கள் மீதும் இன்னும் கடுமையான வரிகளை விதிக்கும் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் எச்சரிக்கை விடுத்தார்.


