திருமணத்தை முதல் முறையாக அறிவித்த கீர்த்தி சுரேஷ் !

Advertisements

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் திருப்பதி ஏழுமலையானை இன்று அதிகாலையில் வழிபட்டார்.

Advertisements

2000-ம் ஆண்டுக் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் அதன் பின்னர் சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். பின்னர் 2015-ம் ஆண்டு வெளியான “இது என்ன மாயம்” திரைப்படம் மூலமாக நடிகையாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் ரஜினி முருகன், பைரவா, மகாநதி, சர்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்ய இருப்பதாகச் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. திருமண செய்தியைச் சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்திருந்த கீர்த்தி சுரேஷ், தனது சகோதரி ரேவதி சுரேஷ், தந்தை சுரேஷ்குமார், தாய் மேனகா ஆகியோருடன் திருப்பதிக்கு வருகை புரிந்துள்ளார். அதிகாலை விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்டார். பின் அவருக்குத் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.

கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய கீர்த்தி சுரேஷ், “நீண்ட நாட்களுக்குப் பின் ஏழுமலையானை வழிபட்டது மனதுக்கு இதமாக உள்ளது. அடுத்த மாதம் எனக்குத் திருமணம். திருமணம் கோவாவில் நடைபெறும்.” என வெட்கப்பட்டு கொண்டே கூறினார். அதோடு தற்போது தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘பேபி ஜான்’ படத்தில் நடித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *