
விஜய்யுடன் இதுவரை எந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையும் தேசிய ஜனநாயக் கூட்டணி நடத்தவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு இழுக்க பாஜக முயற்சித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, விஜய் குறித்தும் தமிழக வெற்றிக் கழகம் குறித்தும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தவெகவை கூட்டணிக்கு இழுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்றும் சூப்பர் ஸ்டார்களால் எந்தத் தாக்கமும் இருக்காது என்றும் கூறினார்.
திரையுலகில் ரசிகர்களை வைத்திருப்பதும் அதை வாக்குகளாக மாற்றுவதும் முற்றிலும் வேறுபட்ட விஷயங்கள் என்றார். விஜய்யுடன் இதுவரை எந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையும் தேசிய ஜனநாயக் கூட்டணி நடத்தவில்லை” என்று தெரிவித்தார்.
திமுகவின் ஊழல் மற்றும் தமிழ் விரோத கலாசாரத்தால் தமிழ்நாடு மிகவும் வெறுப்படைந்துள்ளது” என்றும் கூறினார்.



