
நம் குழந்தைகள் ஒரு சிலர் கீரை சாப்பிட மறுப்பார்கள். பொடியாக நறுக்கி கஞ்சியில் கலந்து செய்தால் குழந்தைகள் குடிப்பார்கள்.
தேவையான பொருட்கள்;
பச்சை அரிசி – 1 கப்
பாசி பருப்பு – 1/2 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்

சின்ன வெங்காயம் – 8
பட்டை – 1
கிராம்பு – 4
தக்காளி – 1
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 10 பல்

கீரை – 1 கட்டு (சுத்தம் செய்தது)
வெங்காயம் – 1 (மீடியம் அளவு)
கேரட் – 1 (சின்னதாய் நறுக்கியது)
கொத்தமல்லி, புதினா, கருவேப்பில்லை – தேவைக்கேற்ப

பச்சை மிளகாய் – 3
கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

நெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நோன்பு கஞ்சி செய்முறை;
முதலில் அரிசி, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
ஒரு கடாயில் பாசிப்பருப்பை நன்கு வறுக்க வேண்டும். பிறகு, ப்ரஷர் குக்கரில் பச்சை அரிசி, வறுத்த பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, நறுக்கிய இஞ்சி, 10 பல் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா, கேரட், கீரை ஆகிய அனைத்தையும் சேர்த்து 8 கப் தண்ணீர் விட்டு 4 முதல் 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
இன்னொரு 5 விசில் வரும்வரைக் காத்திருக்கவும். தேவைக்கேற்ப, கஞ்சி பதமாக வரும்வரை அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்கவிடுங்கள்.
தேங்காய் பால் சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிடம் கொதிவந்த பின் அடுப்பை அணைத்து விடுங்கள்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, பட்டை , கிராம்பு போட்டு கொத்தமல்லி, புதினா தேவைக்கேற்ப சேர்த்து தாளிக்க வேண்டும். இந்த தாளிப்பை தயார் நிலையிலுள்ள கஞ்சியில் சேர்த்து ஒருமுறை கிளறினால், கம கமனு ருசியான நோன்பு கஞ்சி தயார்.

