
வேளச்சேரி காந்தி சாலையில் வேளச்சேரி பிரண்ட்ஸ் 28 ஆம் ஆண்டு பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், அப்போது சேர்மன் துரைராஜ் மற்றும் அப்பகுதி மாமன்ற உறுப்பினர் மணிமாறன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிகள் 500க்கும் மேற்பட்டோருக்கு புடவை அரிசி பிளாஸ்டிக் வாலி தாம்பூல தட்டு வழங்கப்பட்டது மற்றும் பொங்கல் போட்டியில் வெற்றி அடைந்த சிறுவர் சிறுமிகளுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் யோகா மாஸ்டர் மணிமாறன் அவர்கள் நான் பல ஆண்டுகளாக கட்சியாக வேலை பார்க்கிறேன் ஆனால் ஒரு பதவி கூட வாங்காமல் கட்சியில் இருக்கிறேன் என்று பெருமிதமாகவும் ஒரு ஆதங்கமாக கூறினார்.
வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜேஎம்எச் அசான் மௌலானா பேச்சு:
வழக்கமாக நிகழ்ச்சி நடத்துவரின் பெயர்தான் கீழிருக்கும்.நான் கூட நமது மாமன்ற உறுப்பினர் எவ்வளவு பெரிய உருவத்தை வைத்துக் கொண்டு எப்படி யோகா ஆசிரியர் ஆனார் என்றும் அவருக்கு தான் உடல் வளையாதே என்று யோசித்தேன். அப்புறம் பார்த்தால் தான் தெரிந்தது அது வேறொரு யோகா மாஸ்டர் மணிமாறன் என்று தெரியவந்தது. பலமுறை நான் மணிமாறனை பார்த்து இருக்கிறேன் அப்போதெல்லாம் எனக்கு அவர் யோகா மாஸ்டர் மணிமாறன் என்று தெரியாது தற்போது தான் எனக்கு தெரிகிறது.
எங்கு தத்தளிக்குதோ இல்லையோ வெள்ளத்தில் கண்டிப்பான முறையில் வேளச்சேரி தத்தளிக்கும். வெள்ளத்திற்கு பிறகு மாண்புமிகு முதலமைச்சர் நிவாரணத் தொகை 6000 எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்று அமைச்சர் மா சுப்பிரமணியவிடம் கேட்கும்போது அவரது தொகுதி கூட விட்டுவிட்டு வேளச்சேரியில் இருந்து தரலாமே என்று சொன்னவர் அய்யா மா சுப்ரமணியன் அவர்கள்.
மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் அதிகமான விஷயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மூன்று பகுதிகளை மட்டும் தவிர்த்து மற்ற எல்லாம் பகுதிகளுக்கும் செயல் டிட் வழங்கலாம் என்று அரசாங்கத்தின் ஆணை வந்துள்ளது. அதன் அடிப்படையில் வேளச்சேரியில் செயல் டிட் நமது ஆட்சியில் நிறைவேறி விடும். எத்தனை குடிசை மாற்று வாரியத்தில் இருக்கக்கூடிய அவர்களுக்கு செயல் டிட் வழங்கக்கூடிய நிகழ்வும் நிறைவேற்றிவிடும் அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் இன்று இந்தியா என்கிற மிகப்பெரிய கூட்டணியை வழிநடத்தக்கூடிய ஆற்றல் மிகுந்த சக்தியாக இன்று நம் முதல்வர் திகழ்கிறார் இன்று நம்முடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.

