Advertisements

நீட் நுழைவுத் தேர்வு கட்டணத்தைத் திரும்ப பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஜுன் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இளங்கலை மருத்துவப்படிப்புக்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், வினாத்தாள் கசிந்ததாக எழுந்தப் புகாரையடுத்து 12 ஆம் தேதி இந்த தேர்வை ரத்து செய்வதாகத் தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இந்நிலையில், மறுதேர்வு ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் செலுத்திய நுழைவுத் தேர்வு கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தேர்வு கட்டணத்தைத் திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் மே 27 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், 13 லட்சம் மாணவர்கள் நுழைவு கட்டணத்தைத் திரும்ப பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
இதன்காரணமாகத், தேர்வு கட்டணத்தைத் திரும்ப பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தைத் தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது.
இதன்படி, ஜூன் மாதம் 22 ஆம் தேதி வரை மாணவர்கள் தாங்கள் செலுத்திய கட்டணத்தைத் திரும்ப பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
Advertisements


