TVS Motors Venu Srinivasan: நிவாரண நிதியாக ரூ.3 கோடி!

Advertisements

மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.3 கோடியை முதல்வரிடம் டி.வி. எஸ். குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன் வழங்கினார்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனபடி டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை  தலைமை செயலகத்தில் சந்தித்து காசோலையை வழங்கினார்.

பேரிடர் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வர உதவிய நல்லுள்ளங்கள் பலர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களுடைய பங்களிப்பை அளித்து வருகின்றனர். அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் முதல்வர். இயற்கைப் பேரிடரில் இருந்து மீள கூடுதல் நிதி ஆதாரங்கள் தேவைப்படுவதாகவும் அறிவித்திருந்தார்.

எனவே அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும்  வேண்டுகோள் விடுக்கிறேன் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு டி,வி. எஸ் நிறுவனம் 3 கோடி வழங்கியுள்ளது. டிவிஎஸ் குழுமத்தின்  தலைவர் வேணு சீனிவாசன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச்  செயலகத்தில்   சந்தித்து காசோலையை வழங்கினார். அப்போது தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உடன் இருந்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *