
சென்னை:
சென்னையில் இன்று பிரபல பாடகர் எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதை அடுத்து தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை அறிவித்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான எட் ஷீரன் 11 வயதில் இருந்தே இசை துறையில் ஈடுபட்டுள்ளார். அவரது முதல் ஆல்பமான ‘பிளஸ்’ 2011 ஆம் ஆண்டு வெளியானது.
அதற்குப் பிறகு பல ஆல்பங்களை வெளியிட்டுள்ள எட் ஷீரனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றன.
தொடர்ந்து வெளியான மல்டிபிள், டிவைட் ஆகிய அவரது ஆல்பங்கள் பிரம்மாண்ட வெற்றி பெற்றன. அதனைத் தொடர்ந்து அவர் உலகம் முழுவதும் பயணித்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் மும்பையில் நடைபெற்ற அவரது இசை நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
அதில் ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே புனே, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் இசை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், இன்று சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி பெங்களூருவிலும், 12ஆம் தேதி ஷில்லங்கிலும், 14 ஆம் தேதி டெல்லியிலும் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது.
சென்னையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் டிக்கெட் புக் செய்துள்ளனர்.
இந்நிலையில், எட் ஷீரனின் இசை நிகழ்ச்சியையொட்டி தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,” சர்வதேச பாடகர் எட் ஷீரனின் 2025 இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, 05.02.2025 அன்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 15.00 மணி முதல் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
