விசிக மாநில செயலாளர் சஸ்பெண்ட்: திருமாவளவன் அதிரடி நடவடிக்கை.!

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்’ நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் செயல்பட்ட விசிக மாநில செயலாளரை விசிக தலைவர் திருமாவளவன் இடைநீக்கம் செய்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் இளையோர் அமைப்பான ‘இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை’ என்னும் துணைநிலை அமைப்பின் மாநில செயலாளர் சரவணன் என்கிற சங்கத்தமிழன் கட்சியின் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறினார்.

தேர்தலுக்கு முன்பு ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்’ நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையிலும், கட்சியின் நலன்களுக்கு எதிரான அவரது நடவடிக்கைகள் குறித்து, எடுத்துக்கூறியும் அவரது நடவடிக்கைகளில் எத்தகைய மாற்றமும் இல்லை என்றார்.

இந்நிலையில், கட்சியின் நலன்களைக் கருத்தில்கொண்டு சரவணன் என்கிற சங்கத்தமிழனை கட்சியிலிருந்து மூன்று மாத காலத்திற்கு இடை நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *