மோசடி வழக்கில் மா. சுப்பிரமணியன் கைது? திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி.!

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

1995-ல் மா. சுப்பிரமணியன் தனது மனைவி காஞ்சனா பெயரில் அந்த சொத்தை கண்ணனிடமிருந்து வாங்கியதாகவும், பின்னர் சிட்கோ உரிமை மாற்ற நடவடிக்கையின்போது, கண்ணன் கையெழுத்திட்டதாகக் கூறப்படும் ஆவணங்கள் மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி, காஞ்சனா கண்ணனின் மகள் எனக் காட்டி உரிமையை மாற்ற முயன்றதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இந்த வழக்கை விசாரித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மா.சுப்ரமணியன் மீது மோசடி, கூட்டுச் சதி, ஊழல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட சட்ட பிரிவுகளில் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னையில் உள்ள சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.2006–2011 காலகட்டத்தில் சென்னை மேயராக இருந்தபோது, அந்த குடியிருப்புக்கு சொத்து வரி மதிப்பீடு, மின் இணைப்புகள் உள்ளிட்டவை காஞ்சனா பெயரில் பெறப்பட்டு, குடியிருப்பை சட்டபூர்வமாக்க முயற்சி செய்ததாக போலீஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு தள்ளிவைக்கபட்டது. இதனை எதிர்த்து மா.சுப்பிரமணியம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரின் மனுவை கடந்த ஆண்டு மே மாதம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் விசாரணை தள்ளவைக்கப்பட்டு வந்தது.

வழக்கில் ஏமாற்றுதல், போலி ஆவணங்கள் தொடர்பான பிரிவுகள் கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.2019-ல் CBCID வழக்குப் பதிவு செய்து, பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.

அவர் தரப்பில், இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்டது, அந்த இடத்தை 1998-க்கு முன்பே வாங்கியதாகவும், தாம் வாங்கியதால் சிட்கோவுக்கோ அரசுக்கோ எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றும் வாதிடப்பட்டுள்ளது. வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

2025 மார்ச் 28 அன்று சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை ரத்து செய்ய மா. சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. குற்றச்சாட்டுகளை விசாரணை நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறியது.பின்னர், 2025 மே மாதத்தில், சிறப்பு நீதிமன்றம் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், ஆஜராகாவிட்டால் குற்றச்சாட்டுப் பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டதாக செய்தி வெளியானது.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரின் மனைவி காஞ்சனா ஆகியோர் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்து கூறினார்.

இதற்கு பதில் அளித்த மா.சுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவி, தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், இது முற்றிலும் தவறு எனவும் தெரிவித்தனர்.இதனையடுத்து இருவர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நீதிபதி, வழக்கின் சாட்சி விசாரணை ஆகஸ்ட் 31- ஆம் தேதிக்கு நடைபெறும் என்று, வழக்கு விசாரணை அன்றைய தினத்துக்கு தள்ளிவைப்பதாக உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *