சட்டபேரவையில் வெற்றி யாருக்கு என நடத்தப்பட்ட கருத்து கணிப்பில், 60.58 சதவீதம் பேர் விஜய்க்கு ஆதரவு..!

சட்டபேரவையில் வெற்றி யாருக்கு என நடத்தப்பட்ட கருத்து கணிப்பில், 60.58 சதவீதம் பேர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், வரும் 2026 தேர்தலில் யாருக்கு முதல்வர் வாய்ப்பு  என்ற தலைப்பில், ‘இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு’ சார்பாக கருத்து கணிப்பு நடைபெற்றது. சென்னை தனியார் கல்லுாரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட, இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு சார்பில், 2026 தேர்தலில் யார் முதல்வராவார் என்பது குறித்து, 234 தொகுதிகளில் கருத்து கேட்கும் பணி, கடந்த பிப்., 5ம் தேதி துவங்கியது.

தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகள், மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் கட்சிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரதான கேள்விகளை மையமாக வைத்து, கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.அதன்படி, தமிழகத்தில் அடுத்த முதல்வராக அதிக வாய்ப்புள்ள தலைவர்கள் என்ற கேள்விக்கு பெற்றப்பட்ட கருத்துகள் அடிப்படையில், 77.83 சதவீதம் பேர், ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்து, 73.30 சதவீதம் பேர் பழனிசாமிக்கும், 64.58 சதவீதம் பேர் அண்ணாமலைக்கும், 60.58 சதவீதம் பேர் விஜய்க்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் கூட்டணிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த கருத்து கணிப்பு மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் இது மாதிரியான கருத்து கணிப்புகள் இறுதியில் பொய்யாகி உள்ளனர்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதால் சட்ட பேரவை தேர்தலின் முடிவுகள் வரும் வரை, கணிப்புகள் வெறும் கணிப்புளாகவே பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *