அதிமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சிகள்..சேலத்தில் ஈபிஎஸ்..!

Advertisements
சேலத்தில் நடந்த ஈபிஎஸ், நயினார் நாகேந்திரன் சந்திப்பில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் இணைப்பது தொடர்பாக பேசியிருக்கின்றனர்.
தமிழக அரசியலில் அதிமுக உட்கட்சி பூசலால் பற்றி எரியும் நெருப்பு இன்னும் அடங்கவில்லை. ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவர் அரசியல் ரீதியாக நினைவூட்டி கொண்டே, பதில் சொல்லி கொண்டே இருக்கின்றனர்.
இந்நிலையில் தான் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியுள்ளார். இது அரசியல் ரீதியா பெரிய அளவுல  முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஏனெனில் அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசலுக்கு பாஜக சமரசம் செய்து வைப்பதாக தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனை பல்வேறு சமயங்கள்ல  அக்கட்சி தலைவர்களே உறுதி செய்துள்ளனர். தற்போது ஒன்றுபட்ட அதிமுக என்ற குரல் கட்சிக்கு உள்ளிருந்து செங்கோட்டையன் எழுப்பியுள்ளார். இதற்கு வெளியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோரிடம் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது.
ஆனால் பிரிந்து சென்றவர்களுக்கு மீண்டும் கட்சியில் இடமில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார். இந்த விஷயத்திலும் டெல்லியின் தலையீடு மற்றும் சமரச முயற்சிகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை பற்றி தான் ஈபிஎஸ் – நயினார் நாகேந்திரன் சந்திப்பு நிகழ்ந்திருக்குமா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
இதுபற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரிக்கையில், 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கி வைக்க எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் சந்தித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *