ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த உடன்பாடு கையொப்பம்.!

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த உடன்பாடு கையொப்பமாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே எல்லைப்பகுதியில் போர் நடைபெற்று வந்தது. ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டுப் பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இருநாடுகளிடையே போர் நிறுத்தத்துக்கான பச்சு கத்தார் நாட்டில் நடைபெற்றது. அதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் போர் நிறுத்தத்துக்கான இருதரப்பு உடன்பாட்டில் கையொப்பமிட்டுள்ளனர்.

அமைதிப் பேச்சு நடத்தவும், போர் நிறுத்த உடன்பாட்டை எட்டுவதற்கும் ஏற்பாடு செய்து முதன்மைப் பங்காற்றிய கத்தார், துருக்கி நாடுகளுக்கு ஆப்கானிஸ்தான் செய்தித் தொடர்பாளர் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *