கமேனி மீது கை வைத்தால் அது முழு போர்!

ஈரானின் பொருளாதார நெருக்கடிகளுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தான் காரணம் என்று ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.

ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் போன்ற முக்கிய நகரங்களில் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்த்தைக் கலைக்க முயன்ற காவல்துமுறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் நடந்த போராட்டத்தில் சுமார் 500 பாதுகாப்புப் படையினர் உட்பட 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் அளித்த பேட்டி ஒன்றில் ஈரானில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டாலோ அல்லது தூக்கிலிடப்பட்டாலோ அமெரிக்கா தலையிட வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த கூற்றைக் கண்டிதுது ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

எந்தவொரு அநீதியான ஆக்கிரமிப்புக்கும் ஈரானின் பதிலடி கடுமையானதாகவும் வருந்தத்தக்க வகையிலும் இருக்கும் என்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான எந்தவொரு தாக்குதலும் ஈரானுக்கு எதிரான முழுமையான போருக்குச் சமம் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து ஈரானின் பொருளாதார நெருக்கடிகளுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தான் காரணம் என்றும் நீண்டகால விரோதமும் , மனிதாபிமானமற்ற பொருளாதார தடைகளும்தான் ஈரானிய மக்கள் எதிர் கொள்ளும் சிரமங்களுக்கு ஒரு முக்கிய காரணமாகத் திகழ்கிறது என்றும் பதிவிட்டுள்ளார். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *