சென்னையின் முகமே மாறும் வகையில் எண்ணற்ற திட்டங்கள்..!

சென்னையின் முகமே மாறக்கூடிய வகையில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து இருக்கின்றோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, அடுத்த நெம்மேலியில் நீர்வளத்துறை சார்பில் 342 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாமல்லன் நீர்த்தேக்கம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து, அவர் பேசிய போது, இயற்கையோடு இணைந்தது தான் தமிழர் வாழ்வு என்றும், இதையொட்டியே தான் திமுக அரசு என்றும் கூறினார். பின்னர், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்காக தி.மு.க. அரசு எத்தனையோ திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறது.

மேலும், சென்னையின் முகமே மாறக்கூடிய வகையில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *