டிராகன் திரைப்படத்தில் ;கார்த்தி திரைப்பட நடிகர்கள்!

Advertisements

ஓ மைக்கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக டிராகன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் டிராகன் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டிராகன் படத்தின் கதாப்பாத்திர போஸ்டர்களைப் படக்குழு வெளியிட்டவண்ணம் உள்ளன. அதுப்படி கயடு லோஹர், விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளதாகப் போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தனர்.

அதைத்தொடர்ந்து தற்பொழுது படத்தில் தனபால் என்ற கதாப்பாத்திரத்தில் மரியம் ஜார்ஜ், சித்ரா என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை இந்துமதி நடித்திருப்பதாகப் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, லியோ ஆகிய திரைப்படங்களில் நடித்தபின் மரியம் ஜார்ஜிற்கு என ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான மெய்யழகன் திரைப்படத்தில் நடிகை இந்துமதி நடித்த காட்சி ரசிகர்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *