
சென்னை:
தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் சத்யராஜ். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சத்யராஜின் மனைவி 4 வருடங்களாகக் கோமாவில் இருப்பதாக அவரது மகள் திவ்யா கூறியுள்ளார்.

என் அம்மா 4 வருடங்களாகக் கோமாவில் இருக்கிறார். அவருக்குச் செயற்கை குழாய்மூலம் உணவு கொடுத்து வருகிறோம். இதனால் என் தந்தை சிங்கிள் பெற்றோராக இருக்கிறார். எங்கள் அம்மா கண்டிப்பாகப் பிழைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் எனச் சத்யராஜ் மகள் திவ்யா கூறினார்கள்.

