வங்கக்கடலில் வரப்போகும் காற்றழுத்த தாழ்வு!

Advertisements

சென்னை:

‘தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவ.,11) உருவாகும் என்று கணிக்கப் பட்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது’ என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ல் துவங்கியது. பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவம்பர் 11) உருவாகும் என்று கணிக்கப்பட்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

‘அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் தமிழகம், இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சி அதே இடத்தில் நீடிக்கிறது.

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நவம்பர் 15ம் தேதிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகி, அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *