
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணிதான் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் விஷயத்தில் முடிவெடுத்துள்ளது பற்றி, தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
இதன்மூலம், தேர்தல் ஆணையம், அன்புமணியை பா.ம.க. தலைவராக ஏற்கனவே அங்கீகரித்ததை தெளிவாக்கியுள்ளது. தற்போதைய சூழலில் நீதிமன்றம் பா.ம.க. வழக்கு தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பா.ம.க.வின் தலைவர், நிர்வாகிகள் யார் என்பதை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு தடை இல்லை என்ற வாதத்தை பதிவு செய்கிறோம் என்றும், தேர்தல் ஆணைய வழக்கறிஞர், ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை மட்டுமே பதிவு செய்கிறோம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



